ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் மாரடைப்பால் திடீர் மரணம்..!

ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் மாரடைப்பால் திடீர் மரணம்..!

திருமகன் காலமானார்

திருமகன் காலமானார்

EVKS elangovan son passed away | நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமகன் இன்று மருத்துவமனையில் காலமானார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார்.

47 வயதான திருமகன் ஈவெரா நேற்று முன் தினம் உடல் நலக்குறைவால் ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மருத்துவமனையிலேயே காலமானார்.

இதை தொடர்ந்து ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.

2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.

வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஈவெராவின் உடலுக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேத்தியும், சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மகளுமான சமணா கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற 2022 குதிரையேற்ற போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து ஜூனியர் சாம்பியன் கோப்பையை வென்றதையொட்டி தந்தையுடன் நேரில் சென்று முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: DMK, EVKS Elangovan