ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சாலைப் பணிகளை ஆய்வுசெய்த முதலமைச்சர்.. மகனுடன் சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சாலைப் பணிகளை ஆய்வுசெய்த முதலமைச்சர்.. மகனுடன் சந்தித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

முதலமைச்சர் ஆய்வு

முதலமைச்சர் ஆய்வு

சென்னையில் சாலைப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அவரது மகனும் திடீரென சந்தித்து பேசினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளரை அறிவிக்கும் முன்பே காங்கிரஸுக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இடைத்தேர்தலில் தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்குமாறு காங்கிரஸ் தலைமையிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், சென்னை மடுவன்கரையில் சாலை அமைக்கும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது மகன் சஞ்சய் சம்பத்துடன் வந்து முதலமைச்சரை சந்தித்து பேசினார். தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகளை முதலமைச்சருடன் இணைந்து ஈவிகேஎஸ் இளங்கோவனும் பார்வையிட்டார்.

First published: