முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சாதியால் ஏதேனும் ஒரு வகையில் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் - அன்புமணி ராமதாஸ்

சாதியால் ஏதேனும் ஒரு வகையில் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் - அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

அனைத்து சாதியும் முன்னேற வேண்டும் என்பதே நோக்கம் - அன்புமணி ராமதாஸ்

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பட்டிவீரன்பட்டி ஊ.ப.சௌந்திரபாண்டியனின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது.

சுயமரியாதை மாநாட்டின் தலைவராக இருந்த ஊ.ப.சௌந்திரபாண்டியன் நாடார் சமூகத்தின் நலனுக்காக மட்டுமின்றி தலித்துக்கள் போன்ற பிற சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர். அப்படிப்பட்ட ஊ.ப.சௌந்திரபாண்டியனின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக சென்னை சைதாப்பேட்டையில் நாடார் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது.

அன்னை வேளாங்கண்ணி பெண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாமக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸை, பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளரும், கவிஞருமான ம. திலகபாமா பாராட்டி வாழ்த்தினார்.

தொடர்ந்து மாநாட்டில் சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து சிறந்த 130 நாடார் சங்கங்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

விழாவுக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் மாஃபா.க.பாண்டியராஜன் நாடார் சுயமரியாதை மாநாட்டை பாராட்டி பேசினார். ஒரு காலத்தில் கோயிலில் நுழைய அனுமதிக்கப்படாத நாடார் சமுதாயம், இன்று ஆயிரக்கணக்கான கோயில்களை உருவாக்கும் அளவுக்கு அசுரவளர்ச்சி அடைந்தது என்றும், படைக்கும் திறன்படைத்த சமுதாயமாக நாடார் சமுதாயம் இருப்பதாகவும் தெரிவித்தார். சுயமரியாதையுடன் தொழில் செய்யும் வாய்ப்பை நாடார் சமுதாயம் உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார். விவசாயம், வணிகம் போன்ற தொழிலில் முன்னேற்றம் அடைவதுடன், தலைமைத்துவத்தை மீட்டெடுக்க  நாடார் சமுதாயம் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும் என்றார்.

அன்புமணி ராமதாஸ் பேசுகையில், சாதியால் ஏதேனும் ஒரு வகையில் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அனைத்து சாதியும் முன்னேற வேண்டும் என்பதே நோக்கம். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு அடையாளம் உண்டு. ஆனால் சாதி பெயரில் இருக்கும் அடக்குமுறையை ஏற்று கொள்ள முடியாது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. வன்னியர், நாடார், மீனவர் போன்ற சமுதாயங்கள் காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அனைத்து சமுதாயமும் முன்னேற வேண்டும். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கங்களை இணைக்கும் விதமாக நடைபெற்ற சமூகநீதி போராட்டத்தில் 21 உயிர்கள் இழந்தோம். அதன் பலனாய் 108 பேருக்கு இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு கிடைத்தது என்றார்.

இதை தொடர்ந்து, பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியன் நாடாரின் தபால் தலை வெளியிடப்பட்டது. பாமக தலைவர் தபால் தலையை வெளியிட, அதை முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் பெற்றுக் கொண்டார்.

First published:

Tags: Anbumani ramadoss