• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அபிநந்தன் தமிழகத்தின் பெருமை - பிரதமர் மோடி

அபிநந்தன் தமிழகத்தின் பெருமை - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

130 கோடி இந்தியர்கள்தான் தன் குடும்பம் என்றும்,  வாழ்வதனாலும், சாவதனாலும் அவர்களுக்காகதான் என்று உருக்கமாக மோடி பேசினார்.

  • Last Updated :
  • Share this:
விமானப்படை விமானி அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது பெருமைக்குரியது என்று  கன்னியாகுமரியில் அரசு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார். அதேபோல், நாட்டின் முதல் ராணுவ அமைச்சரான நிர்மலா சீதாராமனும் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

மோடியின் பேச்சு 



தொடர்ந்து பேசிய மோடி,  புல்வாமா தாக்குதலுக்கு சரியான பதிலடியை நமது ராணுவம் கொடுத்துள்ளதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நமது நடவடிக்கையை உலகமே பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

இந்த துணிவான நடவடிக்கை எடுத்த ராணுவத்திற்கு தலை வணங்குவதாகவும் தெரிவித்த மோடி, எந்தவொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் என்றார்

திமுக- காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஒன்று செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய மோடி, தன் மீதான எதிர்ப்பை, நாட்டின் மீதான எதிர்ப்பாக சிலர் மாற்றுவதாகவும், சிலரின் அறிக்கைகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு காயத்தையும் ஏற்படுத்துவதாகவும் மோடி வருத்தம் தெரிவித்தார். நமது ராணுவத்தை நம்புகிறீர்களா? இல்லையா என்று ம் மோடி அவர்களுக்கு கேள்வி எழுப்பினார்.  

130 கோடி இந்தியர்கள்தான் தன் குடும்பம் என்றும்,  வாழ்வதனாலும், சாவதனாலும் அவர்களுக்காகதான் என்று உருக்கமாக மோடி பேசினார்.

Also Watch:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: