ஒவ்வொரு முறையும், சொல்லிக்கொண்டிருக்க முடியாது.. அமைச்சர்கள், எம்எல்ஏக்களை எச்சரித்த முதல்வர் ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின்

சட்டமன்றத்தில் அமைச்சர்கள் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்யும்போது புகழுரைகளை தவிர்த்துவிட்டு நேரடியாக விஷயத்துக்கு வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சட்டப்பேரவையில், நீதிமன்ற கட்டணம் தொடர்பான திருத்தச் சட்ட மசோதாவை சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று அறிமுகம் செய்தார். முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலினை அவர் வாழ்த்திப் பேசினார்.

    அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, சட்டத் துறை அமைச்சர், சட்டமுன்வடிவை அறிமுகம் செய்யநேரடியாக வரவேண்டும். பதில்அளித்துப் பேசும்போதுகூட சிலவார்த்தைகளை சேர்த்து பேசலாம்.

    Also read: இலங்கை தமிழர்கள் அநாதைகள் அல்ல; அவர்களுக்கு நாம் இருக்கிறோம் - முதல்வர் ஸ்டாலின்

    திமுக உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் உரைகளின்போதும், பதில் அளிக்கும்போதும் உங்களை உருவாக்கிய, ஆளாக்கிய, நம் முன்னோடிகளை குறிப்பிட்டு வணக்கம் செலுத்தி பேசுவது முறையாக இருக்கும்.

    ஆனால், கேள்வி நேரத்துக்கும், சட்டமுன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இங்கு இருக்கும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இது என் கட்டளை என்று அவர் கூறினார்.

    தலைவர்களை புகழ்ந்து பேசினால் நடவடிக்கை:

    இந்நிலையில், இன்றைய தினம் மானியக்கோரிக்கை விவாதத்தில் திமுக உறுப்பினர் ஐயப்பன் தலைவர்களை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது, குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், உறுப்பினருக்கு வழங்கப்பட்ட நேரத்தை மனதில் வைத்து பேச வேண்டும், நேற்றே இது குறித்து கட்டளையிட்டுள்ளேன். தொடர்ந்து தலைவர்களை புகழ்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் எச்சரிக்கை விடுத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Esakki Raja
    First published: