வெள்ளை அறிக்கை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2,63,976 கடன் சுமை உள்ளது

பழனிவேல் தியாகராஜன்

அதிமுக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் கடன் வாங்கியுள்ளது.

 • Share this:
  தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2,63, 976 ரூபாய் கடன் சுமை உள்ளது என நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெயிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  2006ஆம் ஆண்டு முதல் 2011 வரை, மாநிலத்தின் வருவாய் உபரியாக இருந்தது, 2013 முதல் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே வந்தது. கொரோனோவிற்கு முன்பே தமிழக அரசின் வருமானம் மிகவும் சரிந்து இருந்தது. இந்த அளவிற்கு மோசமான நிலையை தமிழகம் அடைந்துள்ளது.

  இந்தியாவில் எந்த பெரிய மாநிலமும் இந்த அளவிற்கு சரியவில்லை. தமிழக அரசுக்கு வருமானம் மிகவும் சரிந்துவிட்டது.

  கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தின் வருவாய் பெரிதாக சரிந்துள்ளது, இந்த நீண்ட கால சரிவு தமிழக பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதித்துள்ளது.

  அதிமுக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் கடன் வாங்கியுள்ளது.

  வெள்ளை அறிக்கையை வெளியிடும் முன்னர் ஆந்திரா, பஞ்சாப் மற்றம் பொன்னையன் வெளியிட்ட அறிக்கை போன்றவை எல்லாம் ஆய்வு செய்யப்பட்டது.

  இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட பலரும் தங்களின் உதவியை, கருத்தை பங்களிப்பை அளித்துள்ளனர்.

  கடந்து 5 ஆண்டுகளாக தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை 1.5 லட்சம் கோடியாக இருக்கிறது. இந்த நிலை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

  உதய் மின் திட்டத்தால் கடும் நஷ்டத்தை மின் துறை சந்தித்தது. 90% மின்சாரத்துறை மீதும், 5% போக்குவரத்து துறை மீதும் கடன் உத்திரவாதம் அதிமுக அரசால் அளிக்கப்பட்டது.

  அரசுப்பேருந்தை ஒரு கி.மீ  ஓடினால் அரசிற்கு ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது.

  மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணங்களில் உள்ளாட்சி அமைப்புகள் 1,743 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர்.

  மத்திய அரசு தமிழகத்திற்கு சேர வேண்டிய GST வரியையும் கொடுப்பதில்லை. 2021-22 ஆண்டுக்கு மட்டும், மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தொகை 20,033 கோடி ரூபாய்.

  தமிழகத்தின் பொது துறை நிறுவனங்களான TANGEDCO மற்றும் போக்குவரத்து கழகங்கள் கடன் பெற 91 ஆயிரம் கோடி ரூபாய்க்கு உத்தரவாதம் அளித்துள்ளது அரசு.

  கடந்த 15 ஆண்டுகளாக வாகன மோட்டார் வரி போன்று வரிகள் உயர்த்தப்படாமல் இருந்துள்ளது. இது மற்ற மாநிலங்களைவிட மிகவும் குறைவு, இது வரி வருவாயை வெகுவாக குறைந்துள்ளது.

  மாநிலத்தின் கடனை செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது. மின்வாரியத்தில் கடனை திருப்பிச்செலுத்தும் தன்மை குறைந்து வட்டி அதிகரித்துள்ளது. தமிழக அரசுக்கான வருமானம் 4ல் ஒருபங்கு குறைந்துவிட்டது.

  முந்தைய திமுக ஆட்சியில் 1.02% ஆக இருந்த வரி அல்லாத வருமானம் கடந்த 10 ஆண்டுகளில் 0.17 ஆக குறைந்தது உள்ளாட்சித் தேர்தலை சரியான நேரத்தில் தமிழக அரசு நடத்தாததால் தமிழக அரசுக்கு ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

  Must Read : வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

  உலக பொருளாதார நெருக்கடி வந்தால் சராசரி மாநிலத்தை விட தமிழகம் அதிகம் பாதிக்கப்படும், இதுதான் தற்போதய நிலை.

  முறைகேடு, தவறு, நிர்வாக திறமையின்மை போன்ற காரணமாக ஒரு லட்சம் கோடி வேறு இடங்களுக்கு சென்றுள்ளது.

  யாரிடம் இருந்து எடுக்க வேண்டுமோ அவரிடம் எடுத்து, யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

  பூஜ்ஜிய வரி (Zero tax) என்பது அர்தமற்ற ஒன்று, சரியான வரி, சரியான விஷயங்களுக்கு மக்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்பன போன்ற முக்கிய அம்சங்களை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், இந்த வெள்ளை அறிக்கையில் ஏதும் தவறு என்றால் அது முழுக்க முழுக்க என்னையே சாரும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.
  Published by:Suresh V
  First published: