• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சசிகலா வந்தாலும் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

சசிகலா வந்தாலும் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா வந்தாலும் அது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

  • Share this:
பெரியாரின் 142வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு கீழே உள்ள அவரின் திருவுருவப் படத்திற்கு முதல்வர் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். பல கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர சாத்திய கூறுகள் உள்ளது என்று கூறிய அவர், எங்களின் கூட்டணியிலிருந்து யாரும் வெளியேற வாய்ப்பில்லை என்றார்.



Also read: மேம்பாலம் திறப்பு விழா: கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றவில்லை - முதலமைச்சர் மீது டிடிவி தினகரன் விமர்சனம்

மேலும், திமுக தேய்பிறை போல் தேய்ந்து கொண்டிருக்கிறதாகவும் அதிமுக வளர்பிறை போல் வளர்ந்து வருவதாகவும் கூறிய அமைச்சர் ஜெயக்குமார், சிறையிலிருந்து சசிகலா வந்தாலும் வரவில்லை என்றாலும் எந்தத் தாக்கத்தையும் அது ஏற்படுத்தாது எனவும் அதுகுறித்து ஊடகங்கள் பில்டப் கொடுப்பதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: