Home /News /tamil-nadu /

பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட பாலம் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட பாலம் - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

எ.வ.வேலு

எ.வ.வேலு

TN Assembly : பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட பாலம் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின் போது பேசிய ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை,
    ஸ்ரீபெரும்புதூர் ஜங்ஷன் பகுதியில் பாலம் கட்டும் திட்டம் எந்த அளவில் உள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ஸ்ரீபெரும்புதூர் சந்திப்பில் உள்ள சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு சொந்தமான சாலை என்றும், மத்திய அரசிடம் அனுமதி பெற்று தான் பாலம் கட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.

    மேலும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், பூந்தமல்லியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் என்று அவரிடமும் வலியுறுத்தியுள்ளதாக கூறி, அந்தக் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

    மேலும், அரசு கொறடா கோவி செழியன், கும்பகோணம் செல்லும் சாலை விரிவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ. வேலு, ஒருவழிச்சாலைகளை இருவழிச்சாலைகளாக்க வேண்டும், இரு வழிச்சாலைகளை 4 வழிச்சாலைகளாக்க முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவாதகக்கூறினார்.

    சில நாட்களுக்கு முன்பு நாகப்பட்டினத்திலிருந்து கும்பகோணத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற போது முதலமைச்சரிடமிருந்து அழைப்பு வந்தது, திருவண்ணாமலையில் 20 இலட்சம் ஆன்மிக பெருமக்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    Must Read : கிராமங்களில் தொடரும் மின்வெட்டு.. சுழற்சி முறையில் மின்சாரம் வழங்குவதாக தகவல்

    அதன்படி, உடனடியாக ஆய்வை ரத்து செய்துவிட்டு திருவண்ணாமலை சென்றதாகவும், எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆன்மிக பெருமக்கள் சிறப்பாக சித்ரா பவுர்ணமியை கொண்டாடினார்கள் என்றும் கூறியதுடன், கூட்டத்தொடர் முடிந்தவுடன் கும்பகோணத்திற்கு ஆய்வுக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் எ.வ. வேலு கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: TN Assembly

    அடுத்த செய்தி