பிரபலமாகி வரும் அரசின் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை திட்டம்.. எளிய வழிமுறைகள் என்ன? அணுகுவது எப்படி?

மருத்துவமனைக்கு செல்லாமல் வரிசையில் நிற்காமல் நிமிடங்களில் எளிதாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ள முடியும்.

பிரபலமாகி வரும் அரசின் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை திட்டம்.. எளிய வழிமுறைகள் என்ன? அணுகுவது எப்படி?
esanjeevani
  • Share this:
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள இ-சஞ்சீவனி திட்டம் ஊரடங்கு காலத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. ஆனால் இது குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்படவில்லை. மருத்துவமனைக்கு செல்லாமல் வரிசையில் நிற்காமல் நிமிடங்களில் எளிதாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ள முடியும்.

esanjeevaniopd.in என்ற  இணையத்தில் இந்த சேவைகள் கிடைக்கின்றன. முதலில் ஆலோசனை தேவைப்படுவோர் தான் எந்த மாநிலம், நகரம் ஆகிய தகவல்களையும், தொடர்பு எண்ணையும் பதிவு செய்திட வேண்டும். அதன் பிறகு நோயாளிக்கான தனி ஐடி மற்றும் டோக்கன் நம்பர் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும். பிறகு ஆலோசனை அறை என்ற திரையில் நீங்கள் வரிசையில் இருப்பது காண்பிக்கப்படும்.

உங்கள் டோக்கன் எண் வரும்போது மருத்துவரிடமிருந்து அழைப்பு வரும். மருத்துவரிடம் தொலைபேசி மூலமே ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். நோயாளி தங்களுடைய முந்தைய மருத்துவ சீட்டுகள், பரிசோதனை முடிவுகள் ஆகியவற்றை ஆலோசனைக்கு முன்பே பதிவேற்றம் செய்யவும் வசதி உள்ளது. ஆலோசனை முடிந்த பிறகு மருத்துவரின் பரிந்துரை சீட்டு அவரது கையொப்பத்துடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


ஒன்றுக்கு மேற்பட்ட ஆலோசனைகள் பெற்றிருந்தால் பழைய பரிந்துரை சீட்டுகளும் நோயாளியின் கணக்கில் கிடைக்கும். இந்த சேவையை இலவசமாக சில நிமிடங்களில் வீட்டிலிருந்த படியே பெற்றுக் கொள்ள முடியும். எனினும் தொடர்பு கொள்ளும் நபருக்கும் மருத்துவருக்கும் சீரான இணைய வசதி இருப்பது மிக அவசியமாகிறது.  இல்லையென்றால் இணைப்பு கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

இ-சஞ்சீவனி இணையத்தில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு வசதியான நேரத்தில் மருத்துவர்கள் கிடைக்கும்படி செய்கிறார்கள். தமிழ்நாடு மருத்துவர்க வாரத்தில் ஏழு நாட்களும் காலை 8 மணி முதல் இரவு மணி வரை இந்த சேவையை வழங்குகிறார்கள். அவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பங்கேற்கிறார்கள். பொது மருத்துவ ஆலோசனை தவிர்த்து எய்ட்ஸ் நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக மருத்துவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்கள்.

இ சஞ்சீவனி இணையவழி மருத்துவ ஆலோசனை மூலமாக இது வரை  5,143 மணி நேரத்துக்கான மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஒரு நோயாளி மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு முன்பாக சராசரியாக இரண்டரை நிமிடங்கள் மட்டுமே காத்திருக்க வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் பொதுவாக 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஆலோசனை வழங்க தயாராக இருக்கிறார்கள். அதில் 50க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டிலிருந்தே இருக்கிறார்கள். இதற்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்ட 617 மருத்துவர்கள் தற்போது இந்த சேவையை வழங்கி வருவதாகவும் மேலும் சிறப்பு நிபுணர்கள் ஆலோசனை வழங்கவுள்ளார்கள் எனவும் தமிழக சுகாதாரத்துறை கூறுகிறது. இந்த திட்டம் தொடங்கப்பட்ட மே மாதம் முதல் தமிழ்நாட்டில் 6471 பேருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
First published: July 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading