இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி

இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை காருடன் பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி

கோப்புப்படம்

ஈரோட்டில் 3 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையை பெறும் நோக்கில் கணவரை காருடன் பெட்ரோல் ஊற்றி மனைவியே எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  பெருந்துறை அடுத்த துடுப்பதியை சேர்ந்த ரங்கராஜன் விசைத்தறி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். 62 வயதான இவருக்கு கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரை, இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது மனைவி ஜோதிமணி மற்றும் உறவினர் ராஜா ஆகியோர் காரில் அழைத்து வந்தனர்.

  திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வந்த போது, காரில் இருந்து புகை வந்ததாகவும், ரங்கராஜனை மீட்பதற்குள் கார் முழுமையாக தீ பிடித்து எரிந்து, அவர் உயிரிழந்ததாக முதலில் கூறப்பட்டது. இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் விசாரித்த போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ரங்கராஜன் ஒரு கோடி ரூபாய் கடன் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

  அதேவேளையில், ரங்ராஜன் 3 கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு எடுத்திருந்ததும், அதற்கு வாரிசுதாரராக மனைவி ஜோதிமணியை நியமித்திருந்ததும் தெரியவந்தது. கடன் பிரச்னையில் இருந்து மீளும் நோக்கில், விபத்து காப்பீடு தொகையை பெற தன்னை கொலை செய்துவிடுமாறு தன்னிடம் கணவர் ரங்கராஜனே கூறியதாகவும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

  இதனால், காருடன் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஜோதிமணியையும் அவருக்கு உடந்தையாக இருந்த உறவினர் ராஜாவையும் போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
  Published by:Vijay R
  First published: