வங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து புதுவிதமான மோசடியில் ஈடுபட்ட பெண்..!

புராஜக்டில் கூட்டுறவு வங்கி மூலம் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் 10 நாட்களுக்கு ஒரு முறை 10,000 ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளார்.

  • Share this:
ஈரோட்டில் வங்கி காசோலையை கலர் ஜெராக்ஸ் எடுத்து விநியோகித்து 60 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக ஒரு பெண் மீது பகீர் புகார் எழுந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவுட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் பாரதி. இவர் கூட்டுறவு வங்கியில் புராஜெக்ட் வேலை செய்து வருவதாக அக்கம் பக்கம் உள்ளவர்கள், உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். தனது புராஜக்டில் கூட்டுறவு வங்கி மூலம் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் 10 நாட்களுக்கு ஒரு முறை 10,000 ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய அந்தியூரைச் சேர்ந்த சுமார் 20 பெண்கள், ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பாரதியிடம் டெபாசிட் செய்துள்ளனர். சுமார் 60 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் பணத்தை வசூல் செய்த பாரதி, பணத்திற்கு ஈடாக கூட்டுறவு வங்கியின் பெயரிலான செக்கை கொடுத்துள்ளார்.


ஒருசில வாரம் கமிஷன் தொகை என்ற பெயரில் ஒரு லட்சம் ரூபாய்க்கு 10,000 ரூபாய் என கொடுத்து வந்துள்ளார். பின்னர் கமிஷன் தொகை கொடுப்பதை பாரதி நிறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவரிடம் டெபாசிட் செய்தவர்கள் கேட்டபோது, கமிஷனும் தரமுடியாது, டெபாசிட் தொகையும் தர முடியாது என மிரட்டியதாக தெரிகிறது.

Also read: கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் பெங்களூரு நகரம் - ஏராளமான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின

இதனால் தங்கள் கையில் வைத்திருந்த செக்கை போட்டு டெபாசிட் செய்த தொகையையாவது எடுத்துக்கொள்ளலாம் என நம்பி கூட்டுறவு வங்கிக்குச் சென்றுள்ளனர். பாரதி கொடுத்த செக் அனைத்தும் ஒரிஜினல் இல்லை என்பதும் ஜெராக்ஸ் எடுத்து அவர் கொடுத்ததும் அங்கே தெரியவந்துள்ளது.இதை அடுத்து ஏமாற்றப்பட்டவர்கள் ஒன்றுசேர்ந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். பெண்கள் புகார் தொடர்பாக விளக்கம் கேட்க பாரதியை தொடர்புகொள்ள முயன்றபோது, அவரே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்தார். அந்த பெண்கள் புகார் அளித்ததுபோல் தான் 60 லட்சம் வாங்கவில்லை என்றும், ஒரு கோடியே 54 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளதாகவும் அவர் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.



பவானியில் உள்ள நெசவாளர் கைத்தறி சொசைட்டியின் மேலாளர் மெய்யப்பன் சொன்னதன் அடிப்படையில் பணத்தை வசூல் செய்து அவரிடம் கொடுத்ததாகவும், தற்போது தன்னை அவர் ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார். மெய்ப்பன் மீது எஸ்.பி.யிடம் புகார் அளிக்க வந்துள்ளதாக கூறினார். இரு தரப்பிடமும் புகாரை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். பாரதியின் புகார் குறித்து மெய்யப்பனிடம் விளக்கம் கேட்டபோது, தான் யாரிடமும் பணம் எதுவும் வாங்கவில்லை எனக்கூறி முடித்துக்கொண்டார்.

முதலீடு, கலர் ஜெராக்ஸ் செக், வங்கி மேலாளருக்கு தொடர்பு என விரிவடையும் மோசடி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி உண்மையை போலீசார் வெளிக்கொண்டு வருவார்களா, பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை பெற்றுக்கொடுப்பார்களா என்பதே பாதிக்கப்பட்டோரின் கேள்விகளாக உள்ளன.
First published: October 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading