முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஈரோடு கிழக்கு தொகுதி- முந்தைய தேர்தல்களில் கட்சிகளின் பெர்பாமன்ஸ் ரிப்போர்ட் இதுதான்...

ஈரோடு கிழக்கு தொகுதி- முந்தைய தேர்தல்களில் கட்சிகளின் பெர்பாமன்ஸ் ரிப்போர்ட் இதுதான்...

ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்கு வாக்குப்பதிவு

Erode east | ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.தி.க, அ.தி.மு.க, காங்கிரஸ் என்று மாறி மாறி வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதியில் இதற்கு முன் நடைபெற்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கட்சிகள் குறித்தும் எந்த கட்சி எவ்வளவு வாக்குகளை பெற்றது என்பது குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.

ஈரோடு தொகுதியில் இருந்து 2008ஆம் ஆண்டு, 98வது சட்டமன்றத் தொகுதியாக ஈரோடு கிழக்கு பிரிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சியின் ஒரு பகுதியை கொண்ட இந்த தொகுதிக்கு முதன்முறையாக 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் 77.58 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரக்குமார் 69,166 வாக்குகள் பெற்று, 10,644 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் முத்துசாமியை தோற்கடித்தார். அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 50.83 சதவீத வாக்குகளையும் திமுக 43.01 சதவீத வாக்குகளையும் பாஜக 2.38 சதவீத வாக்குகளையும் பெற்றது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவில் இருந்து விலகிய வி.சி.சந்திரக்குமார் திமுகவில் இணைந்து அக்கட்சி சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு, 64,879 சதவீத வாக்குகள் பெற்று 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் கடந்த முறையை விட 8 சதவீதம் குறைந்து 69.57 சதவீத வாக்குகளே பதிவானது. இதில், தனித்து போட்டியிட்ட தேமுதிக 4.58 சதவீத வாக்குகளை பெற்றது. பாஜகவின் வாக்கு சதவீதம் 3.75 சதவீதமாக உயர்ந்தது.

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமுகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் யுவராஜ் 8,904 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

நாம் தமிழ் கட்சி 7.65 சதவீத வாக்குகளையும், மக்கள் நீதிமய்யம் 6.98 சதவீத வாக்குகளையும் பெற்றன. நோட்டாவை விட குறைவாக அமமுக 0.79 சதவீத வாக்குகளை பெற்றது.

தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், 1,10,556 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

"திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள மகத்தான அங்கீகாரம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 முதன்முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி கட்சி 64.95 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுக 25.84 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்த வரிசையில் நாம் தமிழர் கட்சி 6.35 சதவீத வாக்குகளை பெற்று, 3வது இடத்தில் உள்ளது.

First published:

Tags: Erode East Constituency