ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். திருமகன் ஈவெரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவின் மகன் ஆவார். திருமகன் ஈவெரா மரணம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமகன் ஈவெரா மறைவிற்கு நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட மற்ற மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜனவரி 31 வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மார்ச் 02 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று லட்சத்தீவு மக்களை தொகுதிக்கும், மகாராஷ்டிராவில் 2 பேரவை தொகுதிகளுக்கும், அருணச்சால பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்டில் தலா 1 தொகுதிகளக்கு பிப்ரவரி 27 சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.