முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இடைத்தேர்தல் ரிசல்ட் - நாம் தமிழர் கட்சிக்கு ஆறுதல்.. அதிமுக, தேமுதிகவுக்கு ஷாக்..!

இடைத்தேர்தல் ரிசல்ட் - நாம் தமிழர் கட்சிக்கு ஆறுதல்.. அதிமுக, தேமுதிகவுக்கு ஷாக்..!

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி

Erode East Bypoll results :பிரதான எதிர்க்கட்சி பின்னடைவை சந்தித்தாலும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனது வாக்கு வங்கியை கிட்டத்தட்ட தக்கவைத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், எதிர்க்கட்சியான அதிமுக சரிவை சந்தித்தாலும், நாம் தமிழர் கட்சி முந்தைய சட்டப்பேரவையில் பெற்ற வாக்குகளை கிட்டத்தட்ட தக்கவைத்துள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. ஆளும் திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் தென்னரசும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும், தேமுதிக சார்பில் ஆனந்தும் களமிறங்கினர். முந்தைய சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவின் வாக்கு கணிசமாக குறைந்தது.

2021 பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் யுவராஜா 58,396 வாக்குகளைப் பெற்றார். ஆனால் இந்த முறை அதிமுக வேட்பாளரே நேரடியாகக் களமிறங்கியும், 43,923 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. பிரதான எதிர்க்கட்சி பின்னடைவை சந்தித்தாலும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனது வாக்கு வங்கியை கிட்டத்தட்ட தக்கவைத்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளர் கோமதி 11,629 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த முறை களம் கண்ட மேனகா, 10,627 வாக்குகளை பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். முந்தைய தேர்தலை விட வெறும் ஆயிரத்து 1,002 வாக்குகள் மட்டும் நாம் தமிழர் கட்சி குறைவாகப் பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கில் சென்ற முறை 7.64ஆக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம், தற்போது 6.2 ஆக சற்று குறைந்துள்ளது.

அதேவேளையில் தேமுதிக இந்த இடைத் தேர்தலில் படுதோல்வியைடைந்துள்ளது. அந்தக் கட்சியின் வேட்பாளர் ஆனந்த் வெறும் 1,432 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு அதிமுக, தேமுதிக கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்திருந்தாலும், முந்தைய தேர்தல் நிலையை மீண்டும் தக்கவைத்திருப்பது நாம் தமிழர் கட்சியினர் இடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Erode Bypoll, Erode East Constituency, Naam Tamilar Cadre, Tamil News