ஈரோடு கிழக்கு வெற்றி நல்லாட்சி புகழ் மகுடத்தில் ஒளிரும் வைரம் - வைகோ
ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி எதிர்பார்த்ததுதான். அன்புச் சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இருபது மாதகால நல்லாட்சி புகழ் மகுடத்தில் ஒளி வீசும் வைரமாக ஈரோடு கிழக்குத் தொகுதி வெற்றி அமைந்திருக்கிறது. வாக்காள பெருமக்களுக்கு நன்றி.
- வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்
இந்தியாவிற்கு வழிகாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் - கி.வீரமணி வாழ்த்து!
ஈரோடு கிழக்குச் சட்டப் பேரவைத் தொகுதியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. மேலும் நேற்று நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியத் துணைக் கண்டத்திற்கே சிறப்பான வழிகாட்டும் உரையை வழங்கியதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
அதிகாரத்தை பயன்படுத்தி திமுக தில்லுமுல்லு செய்துள்ளது: ஈபிஎஸ் குற்றச்சாட்டு
“ஈரோட்டில் குறுக்கு வழியில் காங்கிரஸ் வேட்பாளரை திமுக-வினர் வெற்றி பெறவைத்துள்ளனர். பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் வேட்பாளரை திமுக வெற்றி பெறச் செய்துள்ளனர். விஞ்ஞான ரீதியான தில்லுமுல்லு செய்து திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றியுள்ளது”
- எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு: எந்தெந்த கட்சி எவ்வளவு வாக்குகள்?
66,575 வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பேற்றார். அதிமுக 43,981 வாக்குகள் பெற்று டெப்பாசிட்டை தக்கவைத்தது.
காங்கிரஸ் - 1,10,039
அதிமுக - 43,981
நாம் தமிழர் - 10,804
தேமுதிக - 1,114
நாம் தமிழர், தேமுதிக கட்சிகள் டெபாசிட் இழந்தன!
ஈரோடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவு: 1,10,039 வாக்குகள் பெற்று ஈவிகேஎஸ் வெற்றி!
15 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. 66,575 வாக்கு வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பேற்றார். அதிமுக 41,357 வாக்குகள் பெற்று டெப்பாசிட்டை தக்கவைத்தது.
காங்கிரஸ் - 1,10,039
அதிமுக - 43,981
நாம் தமிழர் - 7,974
தேமுதிக - 1,114
"அந்த 6 பேருக்கு நன்றி..." - தேர்தல் மன்னன் பத்மராஜன் பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய தேர்தல் மன்னன் பத்மராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், " இது 233 வது தோல்வி, ஆனால் மிகவும் மகிழ்ச்சியான தோல்வி. இந்த தேர்தலில் 6 ஓட்டுகள் மட்டுமே பெற்றேன். அந்த 6 பேருக்கும் நன்றி” என தெரிவித்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள்: 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று ஈவிகேஎஸ் முன்னிலை!
14வது சுற்றில் 63,027 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக 41,357 வாக்குகள் பெற்று டெப்பாசிட்டை தக்கவைத்தது.
காங்கிரஸ் - 1,04,384
அதிமுக - 41,357
நாம் தமிழர் - 7,974
தேமுதிக - 1,114