ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த், சுயேச்சைகள் உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து பரப்புரைக்காக ஆயிரக்கணக்கான அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஈரோட்டில் முகாமிட்டிருந்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2, 26,876 வாக்காளர்கள் உள்ள நிலையில், இடைத் தேர்தலுக்காக 52 வாக்கு மையங்களும் 238 வாக்கு சாவடிகளும் அமைக்கப்பட்டன.ஒவ்வொரு வாக்குச்சாவடிகளில் தலா 5 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் வீதம் சுமார் ஆயிரத்து 430 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுத்தப்பட்டன.
இடைத்தேர்தலில் மொத்தம், 74.79 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் பிரித்து எண்ணப்பட உள்ளது. பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் பிரித்து எண்ணப்படும். 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Congress, DMK, Erode, Erode Bypoll, Naam Tamilar katchi, Tamil News