முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 12 நாட்கள் ஈரோட்டில் முகாமிடும் சீமான்.. தெருத் தெருவாக வாக்கு சேகரிக்க உள்ளதாக பேச்சு..!

12 நாட்கள் ஈரோட்டில் முகாமிடும் சீமான்.. தெருத் தெருவாக வாக்கு சேகரிக்க உள்ளதாக பேச்சு..!

சீமான் உரை

சீமான் உரை

மக்களின் ஆதரவை நம்பியே தமது கட்சி தேர்தல் களத்தில் இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலையொட்டி, சூரம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிமனை அலுவலகத்தை அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்துவைத்தார். அப்போது பேசிய அவர், இடைத்தேர்தலில் தங்களது கட்சி சார்பில் மாவட்ட மகளிர் பாசறை துணைச் செயலாளராக உள்ள மேனகா போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மரப்பாலம் பகுதியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு கருத்தையும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு கருத்தையும் தெரிவிப்பதாக விமர்சித்தார். தமிழினத்தை முன்னெடுத்து தேர்தலில் போட்டியிடுவதாகவும் சீமான் தெரிவித்தார். மாற்றத்துக்கான விதையை ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் விதைப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 234 தொகுதிகளுக்கு செல்ல வேண்டி இருந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு நாள் மட்டும் செலவிட வேண்டி இருந்தது. ஆனால், இந்த முறை 12 நாட்களுக்கு மேல் தங்கி பரப்புரை மேற்கொள்ள உள்ளேன். தெருத் தெருவாக சுற்றி மக்களை சந்திப்பதுதான் எங்கள் தேர்தல் அணுகுமுறையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

First published:

Tags: Erode Bypoll, Seeman