முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி... முதல்வருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி... முதல்வருக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..!

முதலமைச்சர் ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இபிஎஸ்

முதலமைச்சர் ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், இபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு தோல்வியடைந்தார். எனினும், இடைத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக அதிமுக புகார் தெரிவித்தது.

' isDesktop="true" id="905242" youtubeid="oct6ArAXvcA" category="tamil-nadu">

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை புகார் அளித்துள்ளார். அதில்,  “வாக்காளர்களை ஓர் இடத்தில் அடைத்து வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டது, தேர்தல் விதிமுறையை மீறி திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஒட்டகத்தை பயன்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டது, வகுப்புகள் நடந்த நேரத்தில் பள்ளியில் அமைச்சர் அன்பு மகேஷ் பிரச்சாரத்தில் ஈடுபட்டது, வாக்காளர்களுக்கு வெளிப்படையாகவே பணம் கொடுத்தது, வாக்காளர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றது” உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளதாக பட்டியலிட்டுள்ளார்.

மேலும் பிப்ரவரி 25ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்துவோம் என்று தேர்தல் விதிமுறைகளை மீறி உத்தரவாதம் அளித்தது புகாரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை சுட்டிக்காட்டி, இந்திய தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சரின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் அந்த புகார் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க; இடைத்தேர்தல் ரிசல்ட் - நாம் தமிழர் கட்சிக்கு ஆறுதல்.. அதிமுக, தேமுதிகவுக்கு ஷாக்..!

மேலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததேர்தல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

First published:

Tags: AIADMK, Election commission of India, Erode Bypoll