ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஈரோடு இடைத் தேர்தல்; முக்கிய முடிவை அறிவிக்கும் ஓபிஎஸ்

ஈரோடு இடைத் தேர்தல்; முக்கிய முடிவை அறிவிக்கும் ஓபிஎஸ்

பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம்

Erode East by-election | ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான முக்கிய முடிவை, ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிடுகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அதிமுக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். என இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை 8 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை அவர் வெளியிடுவார் என தெரிகிறது. இந்த நிலையில், காலை 9 மணிக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் ஓ.பி.எஸ். தெரிவிக்கும் கருத்துகள் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

இடைத்தேர்தலில் அதிமுகவே களம் இறங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாலை 4 மணிக்கு தியாகராயநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசுகின்றனர்.

ஓ.பிஎஸ் செய்தியாளர் சந்திப்பு... ஈபிஎஸ் ஆலோசனை... பாஜக நிர்வாகிகளுடன் அதிமுக குழு சந்திப்பு என இன்று அடுத்தடுத்து அதிரடி நகர்வுகள் நிகழும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது இன்றே உறுதியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: AIADMK, O Panneerselvam