ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் கடந்த முறை தமாகா போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதிமுக போட்டியிட விட்டுக்கொடுத்துள்ளது. இதனால் காங்கிரஸ் - அதிமுக இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற கருத்தும் தற்போதே எழத் தொடங்கியுள்ளது. 2021ஆம் ஆண்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வென்றார். இதனால் அவரது குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவருக்கு தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இடைத் தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத்தை களமிறக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Erode Bypoll, EVKS Elangovan