Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

Erode east bypoll: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 5 மணி வரை 71 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவாகியுள்ளது.

  • News18 Tamil
  • | February 27, 2023, 18:08 IST
    facebookTwitterLinkedin
    LAST UPDATED 24 DAYS AGO

    AUTO-REFRESH

    HIGHLIGHTS

    18:8 (IST)

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

    விறுவிறுப்பாக நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி வரை 71 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவாகியுள்ளது.

    கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 66 சதவீத வாக்கு பதிவான நிலையில் இம்முறை கூடுதல் வாக்குப்பதிவு. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

    மாலை 6 மணி வரை வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் - வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

    17:21 (IST)

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 5 மணி நிலவரப்படி 70.58 % வாக்குப்பதிவு

    15:36 (IST)

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்:

    3 மணி வாக்குப்பதிவு நிலவரம்:

    ஆண்கள் - 65350

    பெண்கள் - 69400

    திருநங்கை/திருநம்பிகள் -  8

    மொத்தம் - 134758

    வாக்கு சதவீதம் - 59.22%

    13:22 (IST)

    ஆதார் அட்டை காட்டியும் வாக்கு செலுத்தலாம் - சத்யபிரதா சாகு தகவல்

    ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்கள் ஆதார் அட்டை காட்டியும் வாக்கு செலுத்தலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி வாக்கு செலுத்த வாக்காளர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தகவல்.

    13:16 (IST)

    இடைத்தேர்தலில் பணபட்டுவாடா - அதிமுக மீண்டும் புகார்

    வாக்காளர்களுக்கு 4000 ரூபாய் பணம் கொடுப்பதாக திமுகவினர் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் இன்பதுரை மீண்டும் புகார்..

    ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்ததையடுத்து மீண்டும் புகார்.

    11:28 (IST)

    27.89 சதவீதம் வாக்குகள் பதிவு 

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காலை11 மணி நிலவரப்படி, 27.89 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 32,562 ஆண் வாக்காளர்கள், 30,907 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 63,469 வாக்காளர்கள் தற்போது வரை வாக்களித்துள்ளனர்.

    11:6 (IST)

    ஈரோடு இடைத்தேர்தல் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய ப்ரத சாகு ஆய்வு

    ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய ப்ரத சாகு பார்வையிட்டு ஆய்வு 

    11:1 (IST)

    மின்னணு இயந்திரத்தில் கோளாறு - வாக்காளர்கள் அவதி

    ஈரோடு கிழக்கு தொகுதியில் வீரப்பன் சத்திரம் பகுதியில் உள்ள துவக்க பள்ளியில் நடைபெற்று வரும் 45 ஆவது வாக்கு சாவடி மையத்தில் வாக்கு பதிவு இயந்திர கோளாறு வாக்கு பதிவு தாமதம் வாக்காளர்கள் அவதி

    10:50 (IST)

    ஈரோடு கிழக்குல் பணபட்டுவாடா..? 

    ஈரோடு கிழக்கில் திமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி இன்று இரண்டு வார்டுகளில் பணம் விநியோகம் செய்யப்படுவதாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். 

    10:23 (IST)

    பாஜக சட்டமன்ற உறுப்பினர் வாக்குப்பதிவு 

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.