முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பள்ளிக் குழந்தைகளை கழிவறைகளைக் கழுவ வைக்கும் ஆசிரியை... கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

பள்ளிக் குழந்தைகளை கழிவறைகளைக் கழுவ வைக்கும் ஆசிரியை... கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

Erode District : பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளம்பட்டியில் பள்ளிக் குழந்தைகளை பாத்ரூம் கழுவ வைக்கும் ஆசிரியை மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை தாலுக்காவில் உள்ள முள்ளம்பட்டியில் பள்ளிக் குழந்தைகளை கழிவறைகளைக் கழுவ வைக்கும் ஆசிரியை மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகாவில் உள்ள முள்ளம்பட்டியில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு  முதலில் வரும் மாணவ மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய அங்குள்ள ஆசிரியைகள் நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த காட்சியை அங்கிருந்த ஒருவர் செல்போனில் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் அங்கு ஆய்வுக்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் இது குறித்து ஆசிரியரிடமும், தலைமையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்த சம்பவம் பெற்றோருடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : ஈரோடு : மா.பாபு

First published:

Tags: Erode