முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்.... வீடியோ வெளியானதால் பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாக புகார்

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்.... வீடியோ வெளியானதால் பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாக புகார்

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்....  பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாக புகார்

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்.... பள்ளி நிர்வாகம் மிரட்டுவதாக புகார்

School Students Clean Toilet | கழிவறைகளை மட்டுமன்றி ஆசிரியைகள் உணவருந்தும் தட்டு, டிபன் பாக்ஸ் ஆகியவற்றையும் தினமும் மாணவர்களே  கழுவி சுத்தம் செய்கின்றனர்.

  • Last Updated :

ஈரோடு  அருகே முள்ளம்பட்டி அரசு தொடக்க பள்ளியில் மாணவர்களை கொண்டு  கழிவறைகள் சுத்தம் செய்ய வைத்த  ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியை மீது  நடவடிக்கை எடுக்க கோரி    மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த  முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது.சுமார் 50 மாணவர்கள் படித்து வரும் நிலையில் பள்ளி மாணவ மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்து வீடியோ வெளியாகி பரப்பானது. இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் விசாரணை உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண்ணுண்ணியிடம்  பள்ளி மாணவ மாணவிகள் , பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

அதில்  வீடியோ வெளியான பிறகு மாணவர்களை ஆசிரியைகள்  மிரட்டி வருவதாகவும் , விசாரணைக்கு வந்த கல்விகுழுவிடம் பொய்யான வாக்குமூலம் தரச்சொல்லி ஆசிரியர்கள் வற்புத்து வருவதாகவும் புகார் தெரிவித்தனர்.மேலும்  கழிவறைகளை மட்டுமன்றி ஆசிரியைகள் உணவருந்தும் தட்டு, டிபன் பாக்ஸ் ஆகியவற்றையும் தினமும் மாணவர்களே  கழுவி சுத்தம் செய்கின்றனர்.

Also Readஅமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றம் தண்டனை அல்ல, பரிசு - ஜெயக்குமார்

மாணவ - மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ உண்மை என்றும் , வீடியோ  எடுத்தவர் கத்தியை காட்டி மிரட்டி வீடியோ எடுத்தாக ஆசிரியர்கள் புகார் கொடுக்க சொல்வதாகவும் தெரிவித்தனர். இதே போல் மாணவ மாணவிகளின் பெற்றோர்களை அந்த பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சியினர் புகாரை வாபஸ் பெற சொல்லி மிரட்டுவதாகவும் பெற்றோர்களும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

top videos

    இதே போல் இந்தி மாணவர் சங்கமும் கழிவறை சுத்தம் செய்ய சொல்லிய ஆதிரியை , தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Erode