ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இளம்பெண்ணிடம் சில்மிஷம்.. போதை இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

இளம்பெண்ணிடம் சில்மிஷம்.. போதை இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

Erode : ஈரோட்டில் சாலையில் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஈரோட்டில் இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. 

  ஈரோடு நகரின் பிரதான பகுதியான பன்னீர் செல்வம் பூங்கா அருகே சாலையில் சென்ற இளம்பெண் ஒருவரிடம், இளைஞர் ஒருவர் மது போதையில் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை அந்த இளைஞர் தாக்கி உள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த  இளைஞரை சுற்றி வளைத்துப் பிடித்து, சரமாரியாக தாக்கினர். பெண்கள் சிலர் ஆவேசத்துடன் வாலிபரை காலணியால் அடித்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

  அதனைத் தொடர்ந்து அங்கு வந்த நகர காவல்துறையினரிடம் அந்த இளைஞரை ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த நபர், கருங்கல்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பதும், மாட்டு வண்டி தொழிலாளி என்பதும் தெரியவந்தது.

  Must Read : 'கமிஷன் கேட்டு அமைச்சர் தொல்லை' - கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்த கான்ட்ரா

  சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சில்மிசத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம்  தர்ம அடி வாங்கிய  சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் - மா.பாபு, ஈரோடு. 

  Published by:Suresh V
  First published:

  Tags: Erode, Sexual harrasment