இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த பீகார் தம்பதி கைது!

துண்டு துண்டாக வெட்டப்பட்ட நவீன் உடல்

நிதீஷ்குமாரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, நவீன்குமார் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்குப்பையில் போட்டு கட்டி வைத்திருந்ததைக் போலீசார் கண்டுபிடித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இரண்டு லட்சம் ரூபாய் பணம் கேட்டு தராத காரணத்தால், இளைஞரை துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி வைத்த பீகார் தம்பதியை ஈரோடு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார்-சசி தம்பதி, ஈரோடு முத்துமாணிக்கம் நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.

    சொந்த ஊரான பீகார் செல்லும் போது ரயிலில் பழக்கமான நவீன்குமார் என்ற இளைஞர் அந்த தம்பதியுடன் தங்கி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில், நவீன்குமாரின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நிதீஷ்குமார், 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஈரோடு வந்த பீகார் காவல் துறையினர், தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து விசாரணை நடத்தினர்.

    நிதீஷ்குமாரின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, நவீன்குமார் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்குப்பையில் போட்டு கட்டி வைத்திருந்ததைக் போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து, நிதீஷ்குமார்-சசி தம்பதியை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Also see...






    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Vinothini Aandisamy
    First published: