ஓபிசி (OBC) பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு இனிப்பு செய்தியாக உள்ளதாகவும் , இதற்காக திமுக சட்டப்போராட்டம் நடத்தியதாகவும் , உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக கருவதாகவும் , திமுகவின் லட்சிய பயணம் தொடரும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், ஆட்சியர் அலுவலகத்தின் கூடுதல் கட்டிடம் திறப்புவிழா உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.
இதில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். புதிய திட்டங்களை காணொலி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார.
இந்த விழாவில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல வேறு துறைகள் சார்பில் 93 பயனாளிகளுக்கு 355 கோடியே 26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கொரோனோ காலம் என்பதால் காணொலி காட்சி மூலம் இவ்விழாவில் பங்கேற்பதாக தெரிவித்தார்.
பெருந்துறை ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் 1,311 படுக்கை மற்றும் கொரோனோ சிகிச்சைக்காக 420 படுக்கை வசதிகளை ஏற்பத்திய தொழிற்நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு நன்றியை தெரிவித்தார். ஈரோடு மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று சிக்கய்ய நாய்க்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்கப்படுவதாக தெரிவித்தார்.
Must Read : பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வா? நேரடி தேர்வா? - அமைச்சர் க.பொன்முடி பதில்
விழாவில் தொடர்ந்து பேசிய ஸ்டாலின் உச்ச நீதிமன்ற வழங்கிய OBC பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு இனிப்பு செய்தியாக உள்ளது என்றும், இதற்காக திமுக சட்டப்போராட்டம் நடத்தியதாகவும், உச்ச நீதி மன்ற தீர்ப்பு பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக கருவதாகவும் , திமுகவின் லட்சிய பயணம் தொடரும் என்றும் கூறினார்.
செய்தியாளர் : பாபு, ஈரோடு,
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: MK Stalin, OBC Reservation, Periyar, Supreme court