தேர்தலுக்காக நீட் வராதுனு சொல்லிட்டு இப்ப நீட் வருது, படினு சொன்னா மாணவர்கள் எப்படி படிப்பாங்க? - அண்ணாமலை கேள்வி

அண்ணாமலை

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் முதலில் நீட் தேர்வு எழுதி பாஸ் செய்யட்டும் என்றார் அண்ணாமலை.

 • Share this:
  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுதி முதலில் பாஸ் செய்யட்டும் என ஈரோட்டில் தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

  இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 216 வது நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 3) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் அரச்சலூர்  ஓடாநிலையில் உள்ள திருவுருவ சிலைக்கு தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை , 1967-க்கு பிறகு வந்த தமிழக அரசு பாடப்புத்தகத்தில் சுதந்நிர போராட்ட வீரர்கள் குறித்த வரலாறு  இல்லை நிறைய வரலாறு புறக்கணிப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

  Also Read: விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ₹2000.. மத்திய அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்…

  கீழடி ஆய்வை வரவேற்பதாக தெரிவித்த அண்ணாமலை , கீழடி ஒருவருக்கு சொந்தமில்லை என்றார்.

  நீட் தேர்வை பொறுத்தவரை சமூக நீதியை தாண்டி வெற்றி பெற்றுள்ளது என்றும் , நீட் யாருக்கும்  எதிரானது அல்ல ,  தேர்தலுக்காக நீட் வராதுனு சொல்லிட்டு இப்ப நீட் வருது படினு சொன்னா மாணவர்கள் எப்படி படிப்பாங்க?,  மா.சுப்பிரமணியம் நீட் தேர்வு எழுதி முதலில் பாஸ் செய்யட்டும் என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேகதாது விவகாரத்தில் பா.ஜ.கவின் உண்ணாவிரத போராட்டம் என்பது கர்நாடகாவிலுள்ள அனைத்து எதிர்கட்சிகளுக்கும், ஆளுங்கட்சிக்கும் எதிரானது . தமிழக விவசாயிகளுக்காக  பொதுமக்களுக்காக தான் உண்ணாவிரதம் என்றார். தமிழக மக்களையும் , தமிழுணர்வையும் பிரதமர் மோடி மதித்து வருவதாகவும் , தமிழக பா.ஜ.க ஒவ்வொரு  வீடு வீடாக சென்று மோடி கொண்டு வந்த திட்டங்கள் குறித்து விளக்கும் என்றார்.

  தேர்தல் அறிக்கையில் சொன்னதை முதலில் திமுக செய்யட்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

  மா.பாபு, செய்தியாளர் -  ஈரோடு 
  Published by:Arun
  First published: