ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எல்லமடை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் லோகநாதன். இருவரும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் லோகநாதன் ஊருக்கு அருகே உள்ள ஒரு மதுபானக்கடை அருகே மது அருந்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த தந்தை பழனிச்சாமி அவரிடம் தன்னிடம் கடன் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது கொடுத்த கடனை திருப்பி தரமுடியாது என்று லோகநாதன் கூறியதையடுத்து, ஆத்திரமடைந்த பழனிச்சாமி அவர் வைத்திருந்த அரிவாளால் அவரது மகனை சரமாரியாக வெட்டியதில் லோகநாதனின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அருகிலிருத்தவர்கள் உதவியுடன் லோகநாதனை கோபி மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்த பின் அங்கிருந்து மேல் சிகிச்சைகாக கோவை அரசு மருத்துமணைக்கு கொண்டு சென்றனர்.
Must Read : 100 ரூபாய் கொடுக்க மறுத்த அண்ணன்.. அடித்துக்கொன்ற தம்பி.. மத்தியப்பிரதேசத்தில் பயங்கரம்
இது குறித்து லோகநாதன் மனைவி நந்தினி கோபி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் லோகநாதனின் தந்தை பழனிச்சாமியை கோபி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். பெற்ற மகனை தந்தையே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - தினேஷ். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.