'எங்களுக்கு டாஸ்மாக் வேண்டாம்' போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் - கண்டுகொள்ளுமா தமிழக அரசு?
'எங்களுக்கு டாஸ்மாக் வேண்டாம்' போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் - கண்டுகொள்ளுமா தமிழக அரசு?
டாஸ்மாக் கோப்பு படம்
Tasmac : ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட பொதுமக்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தமிழக அரசு நிராகரிக்காமல் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் வைத்து விடாமல் மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. பவானியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை அடைந்து வருவதாக கூறி கடையை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மக்கள் பவானி - அந்தியூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பவானி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சாலை மறியலில் ஈடுபட்ட மொதுமக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என்று பொதுமக்களிடம் அவர் கூறிய பிறகே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது, படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க டாஸ்மாக் (TASMAC) மதுக்கடையைத் திறக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை பரிசீலித்து கடையை திறக்கக்கூடாது என சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. டாஸ்மாக் மதுக்கடை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும் வகையில் விதிகளில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.
அதன்படி, மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
போராடிய பொதுமக்கள்
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி திருவள்ளுவர் நகர் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட பொதுமக்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தமிழக அரசு நிராகரிக்காமல் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் வைத்து விடாமல் மக்களின் நலன் கருதி டாஸ்மாக் கடையை அகற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
செய்தியாளர் : ஈரோடு : மா.பாபு
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.