Home /News /tamil-nadu /

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது... ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் கைது... ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்

இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

இளம்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

போலீஸார் நடத்திய விசாரணையில் திரைப்படத்தை பார்த்து அதைப்போல் தானும் இளம்பெண்ணை மிரட்டியதாக விசாரணையில் கூறியுள்ளார்.

    ஈரோட்டில் இளம் பெண் குளிப்பதை மறைந்திருந்து செல்போனில் படம் எடுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்ற  இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

    பட்டுக்கோட்டையை சேர்ந்த வாலிபர் கண்ணன் ( வயது 29). இவர்  ஈரோட்டில் தங்கி, இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது குடியிருப்பு அருகில் திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தங்கி அரசு வேலைக்காக படித்து வருகிறார்.   இந்நிலையில் கண்ணன் இளம்பெண் குளிப்பதை தனது செல்போன் கேமராவில் படம் பிடித்துள்ளார். இதனையறிந்த இளம்பெண் கண்ணன் இதுகுறித்து கேட்டுள்ளார்.

    Also Read: மனைவி நடத்தையில் சந்தேகம்.. கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை - ஓசூரில் பயங்கரம்

    எதற்கும் துணிந்தவன்" திரைப்படத்தின்  வில்லன் பாணியில்  நீ குளிக்கும் வீடியோ என்னிடம் இருக்கு. நீ என்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லையென்றால் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இளம் பெண் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் கண்ணனை போலீசார் கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் திரைப்படத்தை பார்த்து அதைப்போல் தானும் இளம்பெண்ணை மிரட்டியதாக விசாரணையில் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட கண்ணனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு  செய்தியாளர் : மா.பாபு 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Arrest, Crime News, Erode, Sexually harassed women, Youths

    அடுத்த செய்தி