2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு - கோவைக்கு பயணிகள் ரயில் இயக்கம்
2 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு - கோவைக்கு பயணிகள் ரயில் இயக்கம்
பயணிகள் ரயில்
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரோட்டில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இதனால் ஈரோட்டிலிருந்து கோவை, திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஈரோடு - கோவை இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரோட்டில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை. இதனால் ஈரோட்டிலிருந்து கோவை, திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இதனால் பயணிகள் ரயில் இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று முதற்கட்டமாக ஈரோடு கோவை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
இதனை வரவேற்கும் விதமாக ரயிலுக்கு மாலை அணிவித்து தேங்காய் உடைத்த ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர் பயணிகளுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.
ஈரோட்டிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் 9.15 மணிக்கு கோவைக்கு செல்லும். இதனிடையே ஈரோட்டில் இருந்து கோவைக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலித்த நிலையில் தற்போது 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினர்.
-செய்தியாளர்: பாபு.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.