தி.மு.க பிரமுகருக்கு கொலை மிரட்டல்விடுத்த அ.தி.மு.க பிரமுகர் கைது - சிறையில் சென்று பார்த்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Youtube Video

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே, திமுக பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த, அதிமுக பிரமுகர் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டார்.

 • Share this:
  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது நம்பியூர் ஒன்றியம். அங்கு, தண்ணீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களுக்கு, கோசனம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த பகுதியிலிருந்து தண்ணீரை பிடித்து தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு கொண்டு சென்றதாக, அதிமுக ஒன்றிய செயலாளர் தம்பி என்ற சுப்பிரமணியம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

  இதுகுறித்து திமுக பிரமுகர் குமார் போலீசில் புகாரளித்ததை அறிந்து, அவரை தகாத வார்த்தைகளில் திட்டியதோடு, கொன்று விடுவேன் எனவும் சுப்ரமணியம் மிரட்டல் விடுத்துள்ளார்.

  கொலை மிரட்டலுக்கான வீடியோ ஆதாரங்களுடன், சுப்ரமணியம் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குமார் புகார் அளித்தார். அதன் பேரில் கொலை மிரட்டல், தகராறில் ஈடுபடுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்த போலீசார் சுப்ரமணியத்தை கைது செய்தனர். தகவலறிந்து காவல் நிலைய வளாகத்தில் திரண்ட அவரது ஆதரவாளர்கள், சுப்ரமணியத்தை விடுவிக்குமாறு கோஷங்களை எழுப்பினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காவல்நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுப்ரமணியத்தை, 14 நாட்கள் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோபிச்செட்டிப்பாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்ட அவரை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சிறைக்குள் சென்று பேசி வந்தார்.
  Published by:Karthick S
  First published: