கண்களை கட்டி கொண்டு சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயது சிறுமி
கண்களை கட்டி கொண்டு சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயது சிறுமி
உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 4 வயது சிறுமி
Erode District : பவானி அடுத்துள்ள கவுந்தபாடி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி கண்களை கட்டி கொண்டு 1 மணிநேரம் 10 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
பவானி அடுத்துள்ள கவுந்தபாடி பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி கண்களை கட்டி கொண்டு 1 மணிநேரம் 10 நிமிடம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
பவானி அடுத்துள்ள கவுந்தபாடி பகுதியை சேர்ந்த முஹம்மத் இக்பால், அப்ஷான தம்பதியரின் மகள் ஹனுனா சஜ்வா . இவர் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வரும் நிலையில் சிலம்பத்தின் மீது இருந்த ஆர்வத்தில் சிறுமி ஹனுனா சஜ்வா கண்களை கட்டி கொண்டு 1 மணி நேரம் 10 நிமிடம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். இந்த சிலம்பம் சுற்றும் உலக சாதனையின் போது அவரது உறவினர்கள் கைகள் தட்டி உற்சாகப்படுத்தினர்.
மேலும் நோபல் வோல்ட் ரெக்கார்ட் சார்பில் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.இதற்கு முன்பு ஹனுனா சஜ்வா,195 நாட்டு கொடிகளின் பெயர்கள் வாசிப்பில் இந்திய புக் ஆப் ரெக்கார்ட், கலாம் வோல்ட் ரெகார்ட், மற்றும் 30 நிமிடம் சிலம்பம் சுற்றி யூனிவெர்சல் ரெக்கார்ட் செய்து படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
செய்தியாளர் : ஈரோடு , மா.பாபு
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.