ஈரோட்டில் 246 கிலோ கஞ்சா பதுக்கல்... வழக்கறிஞர் உட்பட 4 பேர் கைது
ஈரோட்டில் 246 கிலோ கஞ்சா பதுக்கல்... வழக்கறிஞர் உட்பட 4 பேர் கைது
கஞ்சா பதுக்கல்
Erode District : ஈரோடு அருகே சோலார் பகுதியில் வீடு ஒன்றில் கடந்த ஆண்டு மே 23 ம் தேதி காவல்துறை நடத்திய சோதனையில் 11 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 246 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் 246 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இரண்டு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு அருகே சோலார் பகுதியில் வீடு ஒன்றில் கடந்த ஆண்டு மே 23 ம் தேதி காவல்துறை நடத்திய சோதனையில் 11 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 246 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்து, வாடகை வீட்டில் விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருப்பதும் இதன் மதிப்பு 24 லட்ச ரூபாய் எனவும் தெரிவித்தனர்.
இது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கணவன் மனைவி உட்பட ஏற்கனவே இதுவரை 10 பேர் கைதான நிலையில் 4 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஈரோட்டை சேர்ந்த வழக்கறிஞர்கள் எழிலரசன், நதியா மற்றும் பள்ளிபாளையத்தை சேர்ந்த மதன்குமார் அவரது மனைவி கங்காகௌரி ஆகிய நால்வரை தாலுகா போலீசார் இன்று கைது செய்தனர்.
செய்தியாளர் : ஈரோடு , மா.பாபு
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.