ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையம் அங்கப்பாவீதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவருடைய மனைவி கனகா இவர்களுக்கு வினு என்கிற மகனும், கனி என்கிற மகளும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் கமலகண்ணன் என்பவர் தனது மனைவி வனிதாவுடன் வசித்து வருகிறார். பக்கத்து வீடு என்பதால் கனகாவும், வனிதாவும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.
இந்தநிலையில் கனகாவுக்கும், வனிதாவின் கணவர் கமலகண்ணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் கனகாவின் மகள் கனியை கமலகண்ணன் தனது மகள்போல் கவனித்து வந்தார். அந்த சிறுமிக்கு படிப்பு செலவில் இருந்து துணிகள் வாங்கி கொடுப்பது முதல் பல்வேறு செலவுகளை கமலகண்ணன் செய்து வந்தார். இதனால் வனிதாவுக்கும், அவரது கணவர் கமலகண்ணனுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.
சிறுமி கனிக்கு செலவு செய்யக்கூடாது என்று வனிதா கண்டித்து உள்ளார். ஆனால் நான் சம்பாதிக்கும் பணத்தை கனிக்கு தான் செலவு செய்வேன் என்று கமலகண்ணனும் கூறி உள்ளார்.தனது பேச்சை கணவர் கேட்காததால் கனியை கொலை செய்ய வனிதா முடிவு செய்து உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி காலையில் சண்முகநாதன் திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். கனகா திங்களூரில் உள்ள தனியார் மில்லுக்கு வேலை சென்றுவிட்டார்.
அவரது மகன் வினு புல்லாங்காட்டுபுதூரில் உள்ள பாட்டி பாப்பாத்தி வீட்டுக்கு சென்றார். இதனால் சிறுமி கனி மட்டும் வீட்டில் தனியார் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறிமியை கொலை செய்ய வனிதா திட்டமிட்டார். கனியை தனது வீட்டுக்கு விளையாடுவதற்காக வரச்சொல்லி வீட்டுக்குள் அழைத்து சென்றார். அங்கு கனியின் கழுத்தை நெறித்து வனிதா கொலை செய்தார். பிறகு கனியின் உடலை அவர் சுமந்து சென்று வீட்டுக்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் போட்டுவிட்டு, கீழே தவறி விழுந்து கனி இறந்துவிட்டதாக நாடகமாடி உள்ளார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கனியை வனிதா கொலை செய்து நாடகமாடியது அம்பலமானது. இதைத்தொடர்ந்து வனிதாவை போலீசார் கைது செய்தனர். கைதான வனிதா மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஆர்.மாலதி நேற்று தீர்ப்பு கூறினார்.
Also Read: திமுக பிரமுகர் துண்டு துண்டாக வெட்டிக் கொலை.. அடையாற்றில் 3 நாளாக தேடியும் கிடைக்காத தலை
அந்த தீர்ப்பில் சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக வனிதாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலைக்கான தடயங்களை மறைத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.
செய்தியாளர்: மா.பாபு ( ஈரோடு)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child murdered, Crime News, Death, Erode, Illegal affair, Illegal relationship, Police