Home /News /tamil-nadu /

பெண்ணிடமிருந்து சினை முட்டை எப்படி எடுக்கப்படுகிறது? எப்படி பயன்படுத்தப்படுகிறது?

பெண்ணிடமிருந்து சினை முட்டை எப்படி எடுக்கப்படுகிறது? எப்படி பயன்படுத்தப்படுகிறது?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கருத்தரித்தலில் குறைபாடு கொண்ட பெண்கள், பிற பெண்களிடம் சினைமுட்டைகளை தானமாக பெற்று, குழந்தை பெறுவதற்கு உதவுகிறது சோதனைக்குழாய் முறை.

    ஈரோடு சிறுமியிடம் சினை முட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில், சினைமுட்டை எடுக்கப்படுவது எப்படி? அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.

    பருவம் எய்திய பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகின்றன. கருவாக மாறாத சினை முட்டைகள், மாதந்தோறும் மாதவிடாய் நாட்களில் வெளியேறி விடுவது இயற்கை.

    கருத்தரித்தலில் குறைபாடு கொண்ட பெண்கள், பிற பெண்களிடம் சினைமுட்டைகளை தானமாக பெற்று, குழந்தை பெறுவதற்கு உதவுகிறது சோதனைக்குழாய் முறை.

    இந்தியாவைப் பொறுத்தவரை 1986ஆம் ஆண்டுக்கு பிறகுதான் சினை முட்டை தானம் பெறும் முறை அறிமுகம் ஆனது. சினைமுட்டை தானம் கொடுக்கும் பெண் 23 முதல் 35 வயதுக்குள் இருப்பதோடு, அவரது ஆரோக்கியமும் அவசியம்.

    சினைமுட்டை உருவாக, அந்த பெண்ணுக்கு 10 நாட்களுக்கு ஹார்மோன் மாத்திரை அல்லது ஊசி செலுத்தப்படும். ஹார்மோன் ஊசி, ஒன்றுக்கு மேற்பட்ட சினைமுட்டைகளை உருவாக்கினாலும், ஒரு குழந்தை உருவாக ஒரு முட்டை மட்டுமே தேவை.

    இருந்தாலும் எல்லா முட்டைகளுமே ஆரோக்கியமாக இருக்கும் என நம்ப முடியாது என்பதால், 2 அல்லது 3 முட்டைகள் வரை கருப்பைக்குள் வைக்கப்படுவது வழக்கம்.

    தானம் பெறும் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தியதுபோக, எஞ்சிய சினைமுட்டைகள் அனைத்தும் உறைநிலையில் வைத்து பாதுகாக்கப்படும். தானம் பெற்ற பெண்ணுக்கு குழந்தை கிடைக்கவில்லை என்றால், உறைநிலையில் வைக்கப்பட்ட சினைமுட்டைகளை மருத்துவர்கள் பயன்படுத்துவார்கள்.

     

    தானம் பெறும் பெண் அல்லது அவரது கணவர் போல முகத்தோற்றத்துடன் குழந்தை பெறவேண்டும் என்றும் பலர் நினைப்பதுண்டு. அதற்காக, அவர்களது தோற்றத்துடன் கூடிய பெண்களைத் தேடி சினைமுட்டை தானம் பெறுவதும் வழக்கம்...

    சினைமுட்டை தானம் கொடுத்த பெண், எக்காரணம் கொண்டும் குழந்தைக்கு உரிமை கொண்டாட முடியாது என்பது சட்டம். ஒரு பெண் தனது ஆயுட்காலத்தில் ஆறுமுறைக்கு மேல் சினைமுட்டைகளை தானம் செய்வது ஆபத்து.

    ஒரு முறை தானம் செய்வதற்கும், அடுத்த முறை தானம் செய்வதற்கும் இடையில் குறைந்தது 6 மாதங்கள் இடைவெளி இருப்பது அவசியம். சினைமுட்டையின் வளர்ச்சியை தூண்டும் ஹார்மோன் மருந்தின் அளவு கொஞ்சம் அதிகமானாலும் உயிரே பறிபோகும் ஆபத்து அதிகம்.

    அதேபோல், அடிக்கடி சினைமுட்டை தானம் செய்வதும், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஈரோடு சிறுமி விவகாரத்தில் இந்த அத்தனை கட்டுப்பாடுகளும் மீறப்பட்டுள்ளன.

    14 வயதில் தொடங்கி கடந்த 3 ஆண்டுகளாக சினை முட்டைகளை தானமாக கொடுத்துள்ளார் அந்த சிறுமி. இதற்கு சிறுமியின் தாயார் மட்டுமின்றி, ஈரோட்டில் இயங்கும் சுதா, விஜயா ஆகிய மருத்துவமனைகளும், பெருந்துறையில் உள்ள ராம்பிரசாத் மருத்துவமனையும் உடந்தை என்கின்றனர் போலீசார்.
    Published by:Karthick S
    First published:

    அடுத்த செய்தி