முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: டெபாசிட்டை தக்கவைத்த அ.தி.மு.க - நாம் தமிழர், தே.மு.தி.க படுதோல்வி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: டெபாசிட்டை தக்கவைத்த அ.தி.மு.க - நாம் தமிழர், தே.மு.தி.க படுதோல்வி!

தென்னரசு, எடப்பாடி பழனிசாமி

தென்னரசு, எடப்பாடி பழனிசாமி

Erode byepoll results | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்று அ.தி.மு.க டெபாசிட்டைத் தக்கவைத்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த 27ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆளும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உட்பட 77 வேட்பாளர்கள் களம் கண்டனர்.

இந்த தேர்தலில் 74.79 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் பதிவான 398 தபால் வாக்குகளில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு 104 வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 10 வாக்குகளும், தேமுதிக வேட்பாளருக்கு ஒரு வாக்கும் கிடைத்தன. அதன்பிறகு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதல் சுற்று தொடங்கியது முதலே ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

தற்போதைய 10ஆவது சுற்று நிலவரப்படி, ஈவிகேஎஸ் இளங்கோவன் 76,834 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,637 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 4,830 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மிகச் சொற்பமாக 606 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Erode East Bypoll 2023 : ஈரோடு கிழக்கு மகுடம் யாருக்கு? மகன் விட்டு சென்ற பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடருவாரா..

மொத்தம் பதிவான வாக்குகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளுக்கு மேல் பெற்றதன் மூலம் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு டெபாசிட்டைத் தக்கவைத்தார். அவரைத் தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழந்தனர். சட்டமன்ற பொதுத்தேர்தலில் சுமார் 8,000 அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே திருமகன் ஈவேரா வெற்றி பெற்றிருந்தார். தற்போது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அவரது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார்.

First published:

Tags: Erode Bypoll