முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வெளிமாநிலத்தில் இருந்து வரும் அனைவரும் தமிழனாகி விடுகிறார்கள்.. சீமான்

வெளிமாநிலத்தில் இருந்து வரும் அனைவரும் தமிழனாகி விடுகிறார்கள்.. சீமான்

சீமான்

சீமான்

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளுக்கும் ஓரே எதிர்கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே என்று அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதி சூரம்பட்டி நான்கு ரோடு பகுதியில் பரப்புரை மேற்கொண்ட அவர், அக்கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய சீமான், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கிண்டல் செய்தார். ஆறு, மலைகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதாக கூறிய சீமான், பாட்டுப் பாடி வாக்கு சேகரித்தார்.

வெளி மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் அனைவரும் தமிழனாகி விடுவதாக குற்றஞ்சாட்டிய அவர், தமிழன் எங்கு சென்றாலும் தமிழனாகவே இருப்பதாக கூறினார். இந்த தேர்தலில் சிறந்த ஆட்டக்காரன் விருது தங்களுக்குத் தான் வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

First published:

Tags: Erode Bypoll, Seeman