ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

“தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம்...” அண்ணாமலையை போட்டிக்கு அழைத்த காயத்ரி ரகுராம்..!

“தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம்...” அண்ணாமலையை போட்டிக்கு அழைத்த காயத்ரி ரகுராம்..!

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அக்கட்சியில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி சர்ச்சைக்குரிய வகையில் கருத்தை பதிவிட்டதாக காயத்ரி ரகுராம் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்த காயத்ரி ரகுராம், அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாகவும் கட்சியின் அனைத்து கட்சி பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டதாகவும் கட்சி அறிவித்தது.

அதனைதொடர்ந்து, காயத்ரி ரகுராம், தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக மற்றும் கட்சி தலைவர் குறித்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுவதாகவும் அவரை எதிர்த்து தான் நிற்கத் தயார் எனவும் பதிவிட்டுள்ளார்.

இந்த சவாலை ஏற்றுக் கொள்வீர்களா? என வினா எழுப்பியுள்ள காயத்ரி ரகுராம், தமிழகமா அல்லது தமிழ்நாடா என்று பார்ப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். முன்னதாக, பாஜகவை கண்டித்து ஜனவரி 27ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் மேற்கொள்ளவிருப்பதாக காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

First published:

Tags: Annamalai, BJP, Gayathri Raghuram