Home /News /tamil-nadu /

தர்மம், நீதி வென்றது - உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று இபிஎஸ் அறிக்கை

தர்மம், நீதி வென்றது - உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று இபிஎஸ் அறிக்கை

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதற்கு தடையாக உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒரு சில சுயநல விஷமிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டனர் என குறிப்பிட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    அதிமுகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பி.எஸ் மற்றம் அவரது ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளரின் அனுமதியின்றி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதாகவும், அத்துடன் அடைப்படை உறுப்பினர்கள் மட்டுமே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியது என்கிற நிலையில், பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டும் கூடி இந்த முடிவை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    இதனை விசாரித்த தனி நீதிபதி கொண்ட அமர்வு பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும் ஜூலை 11ஆம் தேதிக்கு முந்தைய நிலையே ஆதிமுகவில் தொடரும் என ஓ.பி.எஸ் தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பை வரவேற்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், திமுக அரசின் அராஜகத்தில் இருந்து மக்களை காக்கும் பணியில் அதிமுக ஈடுப்பட்டுவருகிறது. இதற்கு தடையாக உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒரு சில சுயநல விஷமிகள் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டனர் என குறிப்பிட்டார். இதனை எதிர்த்து நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி போராடி வந்ததாகவும் இன்று தர்மம், நீதி வென்றது எனவும் தெரிவித்தார்.

    மேலும் அந்த அறிக்கையில், ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டமும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டமும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டார். மேலும் இதற்காக தன்னுடன் துணை நின்ற அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: ADMK, Chennai High court, EPS, High court, OPS - EPS

    அடுத்த செய்தி