ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் மழைநீர் தேங்க ஈபிஎஸ்தான் காரணம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு!

சென்னையில் மழைநீர் தேங்க ஈபிஎஸ்தான் காரணம் - அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு!

ஈபிஎஸ், தா.மோ.அன்பரசன்

ஈபிஎஸ், தா.மோ.அன்பரசன்

"500 வீடுகள் மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் முதலமைச்சர் வந்து பார்க்கவில்லை."

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னையில் மழை நீர் தேங்கவில்லை என திமுகவினர் பொய்யை பரப்பி வருவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். ஆய்வின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.

  அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மிக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். திமுக அரசு தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்று தவறான செய்தியை தெரிவித்து வருகிறார்கள்.

  'மக்கள் திருப்தியா இருக்காங்க.. எதிர்க்கட்சி விமர்சனமெல்லாம் கவலையில்லை' - சீர்காழி விசிட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின்! (news18.com)

  சென்னை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் முழுவதும் அமைக்கப்பட்டு மழை நீர் தேங்காத வண்ணம் உள்ளதாக தெரிவித்து வருகிறார்கள். 500 வீடுகள் மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் முதலமைச்சர் வந்து பார்க்கவில்லை. அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கவில்லை.

  இந்த பகுதிகளை அமைச்சர்கள் வந்து பார்க்க வேண்டும். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்.” என தெரிவித்தார்.

  இது குறித்து பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், “ஆலந்தூர் பகுதியில் மழைநீர் வெள்ளம் ஏற்பட காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான். திருவள்ளுவர் நகர், கணேஷ் நகரில் கால்வாய் உயர்த்தாமல் இருப்பதே மழை நீர் தேங்க காரணம். கடந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்களை முன்வைத்து நிதி கேட்டோம். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கவில்லை. ஆனால் தற்போது யோக்கியவாதி போல பேசுகிறார்.

  நான் மூன்று நாட்களாக தொகுதியில்தான் இருக்கிறேன். ரூ. 120 கோடி செலவில் போரூரில் இருந்து மழைநீர் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai flood, CM MK Stalin, EPS