ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஓபிஎஸ்-க்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி எச்சரித்த ஈபிஎஸ்

ஓபிஎஸ்-க்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி எச்சரித்த ஈபிஎஸ்

ஓபிஎஸ் -ஈபிஎஸ்

ஓபிஎஸ் -ஈபிஎஸ்

அதிமுக தலைமை அலுவலகம் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஈபிஎஸ் தரப்பில் எச்சரிக்கை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின், கட்சியின் கொடி, லெட்டர் பேடை பயன்படுத்துவது குறித்து விளக்கம் கேட்டு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு, எடப்பாடி பழனிசாமி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில், கடந்த ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தங்களை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும்,ஆனால், அதன் பிறகும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் தாங்கள் போலி அறிக்கைகளை வெளியிட்டு மக்களை தவறாக வழிநடத்துவதாகவும், விதிமுறை மீறி கட்சிக் கொடி, லெட்டர் பேடை பயன்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டள்ளது.தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே இல்லை எனவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மிரட்டும் கொரோனா.. ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

இதுபோன்ற செயல்கள் நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாக உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகம் பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும்,இனியும் அதிமுகவின் பெயரை பயன்படுத்தினால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பன்னீர்செல்வத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: ADMK, OPS - EPS