வாக்குறுதி என்னாச்சு.. நாங்க வெளியே போறோம்... பட்ஜெட்டை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை திமுக தந்தது.

 • Share this:
  தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்து வெளிநடப்பு செய்தது அதிமுக. அக்கட்சியின் எம்.எல்.ஏக்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதற்கான விளக்கத்தை எதிர்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

  தமிழக பட்ஜெட் தாக்கல் கலைவாணர் அரங்கத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

  Also Read: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்து அதிமுக வெளிநடப்பு!

  அதிமுகவினர் அமளி:

  இந்நிலையில், தமிழக அரசின் 2021-22ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். நிதியமைச்சர் பேச ஆரம்பித்தபோது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் எழுந்து பேச தொடங்க, அதற்கு பேரவைத் தலைவர் வாய்ப்பு வழங்கவில்லை..அப்போது அதிமுக உறுப்பினர்கள் மைக் கொடுக்க சொல்லி கோஷமிட்டனர், கோஷமிட்டவர்களை இருக்கையில் அமர சொல்லி சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்திய நிலையில், பத்துக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து மைக் கொடுக்க சொல்லி கோஷமிட்டனர்.

  Also Read: பட்ஜெட்டில் தனியார் பள்ளிகள், பெற்றோர்கள் எதிர்பார்ப்பு என்ன?

  எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்க சபாநாயகர் அறிவுறுத்திய நிலையில் தன் கையில் வைத்திருந்த குறிப்பை தொடர்ந்து வாசித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளி நடப்பு செய்வதாக அறிவித்து அதிமுகவினர் அனைவரும் வெளியேறினர்..

  இபிஎஸ் பேட்டி:

  சட்டமன்ற தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை திமுக தந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் போடப்போகும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என்பது தான் எனக் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகும் நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் பெற்றோர், மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த விடியா அரசு.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நீட் தேர்வு ரத்துக்கு தீர்வு காணமுடியாததாலும், வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் வெற்று விளம்பர அறிக்கையை கண்டித்தும், நமது அம்மா பத்ரிகை அலுவலகத்தில் சோதனை என்ற பெயரில் ஒரு நாள் பத்ரிகையை வெளியிட முடியாமல் தடுத்ததற்காகவும், முன்னாள் அதிமுக அரசின் மீது காழ்புணர்ச்சியுடன் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை கண்டித்தும், உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் பொய் வழக்குகளை போடுவதையும் கண்டித்து பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
  Published by:Arun
  First published: