முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திமுக என்ற கட்சியே இல்லாத நிலை எதிர்காலத்தில் உருவாகும்... எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

திமுக என்ற கட்சியே இல்லாத நிலை எதிர்காலத்தில் உருவாகும்... எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

சிவகங்கை பொதுக்கூட்டத்தில் ஈபிஎஸ் பேச்சு

சிவகங்கை பொதுக்கூட்டத்தில் ஈபிஎஸ் பேச்சு

EPS Speech In Sivagangai | திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை சிதைக்க நினைத்தால் அது நடக்காது என ஈபிஎஸ் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Sivaganga, India

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பி டீமை வைத்துக்கொண்டு அதிமுகவை சிதைக்க நினைத்தால் திமுக என்ற கட்சியே எதிர்காலத்தில் இல்லாத நிலை உருவாகும் என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம் சிவகங்கையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சிவகங்கை சென்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்ட இவ்விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவை சிதைக்க நினைத்தால் அது நடக்காது என தெரிவித்தார். அவரது தந்தை கருணாநிதிக்கே சவால் விட்ட கட்சி அதிமுக எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

First published:

Tags: ADMK, EPS, Sivagangai