Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக் குழுவில் குழப்பங்களை தவிர்க்க ஹைடெக்காக களம் இறங்கிய இபிஎஸ் தரப்பு

அதிமுக பொதுக் குழுவில் குழப்பங்களை தவிர்க்க ஹைடெக்காக களம் இறங்கிய இபிஎஸ் தரப்பு

ADMK : ஜூலை 11ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக் குழுவில் குழப்பங்களை தவிர்க்க ஹைடெக்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் களம் இறங்கியுள்ளனர்.

ADMK : ஜூலை 11ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக் குழுவில் குழப்பங்களை தவிர்க்க ஹைடெக்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் களம் இறங்கியுள்ளனர்.

ADMK : ஜூலை 11ல் நடைபெற உள்ள அதிமுக பொதுக் குழுவில் குழப்பங்களை தவிர்க்க ஹைடெக்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் களம் இறங்கியுள்ளனர்.

    ஜூலை 11-ம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அதிமுக பொதுக் குழுவில் குழப்பங்களை தவிர்க்க ஹைடெக்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் களம் இறங்கியுள்ளனர்.

    ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதன்முறையாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக ‘RFID’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுக்குழு உறுப்பினர்களை பரிசோதனை செய்த பின்னரே ஒவ்வொரு உறுப்பினரும் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

    பொதுக்குழு அல்லாத உறுப்பினர்கள், வேறு ஆட்கள் உள்ளே நுழைவதை தவிர்க்கும் வகையில் அதிமுக தலைமை இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்க 2,665 உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் புகைப்படம், QR SCAN குறியீடு கொண்ட அடையாள அட்டை அச்சிடும் பணி தொடங்கியது.

    அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் பொதுக்குழு நடைபெற உள்ள முந்தைய நாள் இரவு அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதிமுக பொதுக் குழுவில் குழப்பங்களை தவிர்க்க ஹைடெக்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் களம் இறங்கியுள்ளனர்.

    ஓபிஎஸ்-சுக்கு பின்னடைவு:

    ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஓபிஎஸ்-சுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படாத புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது, உட்கட்சி விவகாரங்களில் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது சட்டத்திற்கு விரோதமானது என ஈபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தீர்வு காண முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கட்சி விவகாரங்களில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் கூறினர்.

    மேலும், நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தினர். ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற உத்தரவு மற்றும் அவமதிப்பு வழக்கிற்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்ற தனி நீதிபதியை நாடலாம் என கூறினர்.

    Must Read : இளையராஜாவுக்கு எம்.பி. பதவி... குவியும் பாராட்டு - நன்றி தெரிவித்த ராஜா

    அதிமுக பொதுக்குழு தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஜூலை 11ம் தேதியன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெறும் என்று, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, EPS, OPS

    அடுத்த செய்தி