ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ்? - சட்டமன்றத்தில் புதிய பரபரப்பு!

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ்? - சட்டமன்றத்தில் புதிய பரபரப்பு!

இபிஎஸ் - ஓபிஎஸ்

இபிஎஸ் - ஓபிஎஸ்

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எம்.எல்.ஏக்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமாரை அறிவிக்கக்கோரி சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி துணை தலைவராக இபிஎஸ்க்கு அருகே ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பெரும் சர்ச்சையாகி தேர்தல் ஆணையத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, சட்டப்பேரவை குழுக்களை மாற்றுவது தொடர்பாக மனுக்கள் வந்தால் நிராகரிக்க வேண்டும் என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் எவ்வித முடிவும் எடுக்கக்கூடாது என்றும் இரு கடிதங்களை ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகரிடம் கொடுத்துள்ளார்.

  இதேபோல், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயக்குமாரை அங்கீகரித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் கடிதங்கள் கொடுத்துள்ளார். இதில், சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,

  பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக அமரும் வகையில் உள்ள இருக்கை மாற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

  இதையும் படிங்க | அதிமுக தலைமை மோதல்.. ஸ்மார்ட் சிட்டி ஊழல்.. ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை - எதிர்பார்ப்பில் இன்றைய தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர்

  இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி அருகே ஓ.பன்னீர்செல்வத்திற்கு இருக்கை பழைய நிலையிலேயே தொடரும் என்றும் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பு கொடுத்த கடிதம் பரிசீலனையில் இருப்பதாகவும் சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

  அதேபோல வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரது இருக்கைகள் மாற்றப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தற்போது வரை சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார். சட்டப் பேரவை கூடியவுடன் சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக இது தொடர்பான முடிவை அறிவிப்பார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Lok Sabha Speaker, OPS - EPS, Parliament