முகப்பு /செய்தி /தமிழ்நாடு / டெல்லி பயணத்தை பாதியில் முடித்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி.. குடியரசுத் தலைவர் பதிவியேற்பில் பங்கேற்கவில்லை

டெல்லி பயணத்தை பாதியில் முடித்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி.. குடியரசுத் தலைவர் பதிவியேற்பில் பங்கேற்கவில்லை

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க நேரம் கிடைக்காததால் எடப்பாடி பழனிசாமி தனது டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துகொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

  • Last Updated :

டெல்லி சென்றிருந்த எடப்பாடி பழனிசாமி குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துகொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 4 நாள் பயணமாக கடந்த 22ம் தேதி அவர் டெல்லி சென்றார். அசோகா ஹோட்டலில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் பிரிவு உபச்சார விழாவிலும் அவர் கலந்துகொண்டார்.

இதனைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவராக பதவியேற்கவுள்ள திரவுபதி முர்முவை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தம்பிதுரை, வேலுமணி ஆகியோர் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார்.

அதிமுகவில் தற்போது நிலவும் உட்கட்சி பிரச்சனை, ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு ஆகியவை குறித்து மோடி, அமித் ஷாவிடம் எடுத்துக்கூறி கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவை பெற அவர் திட்டமிட்டிருந்தார். இந்த சந்திப்புக்கு அவர் நேரம் கேட்டிருந்ததாகவும்  கூறப்படுகிறது. எனினும், தொடர் நிகழ்ச்சிகள் காரணமாக இருவரின் நேரமும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மீண்டும் பொறுப்பு.. ஓபிஎஸ் அறிவிப்பு

top videos

    இதனால்இன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல்  தனது டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துகொண்டு எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை திரும்பியுள்ளார். இதனிடையே செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடியை தனித் தனியாக சந்திக்க ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் நேரம் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    First published:

    Tags: AIADMK, Edappadi Palanisami, EPS