ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆப்பரேஷன் மின்னல்.. கைதான 2309 ரவுடிகளை விடுவித்த மர்மம் என்ன? - ஈபிஎஸ் கேள்வி

ஆப்பரேஷன் மின்னல்.. கைதான 2309 ரவுடிகளை விடுவித்த மர்மம் என்ன? - ஈபிஎஸ் கேள்வி

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

2 ஆயிரத்து 390 பேரை சுதந்திரமாக நடமாடவிட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாட்டில் ஆப்பரேஷன் மின்னல் திட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் பலரை சுதந்திரமாக நடமாடவிட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

  இதுதொடர்பாக  சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 16 மாத திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சாடியுள்ளார். மேலும், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜியின் பூர்வீக வீட்டில் பணம், நகை மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகள் உட்பட அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

  இதனிடையே, ஆப்பரேஷன் மின்னல் திட்டத்தில் மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்தில் 3,905 ரவுடிகள் கைது செய்யப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் 705 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 2,390 ரவுடிகளிடம் உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

  இதையும் படிங்க | லீவு விடுங்க மேடம்.. கலெக்டருக்கு மெசேஜ் அனுப்பும் புதுக்கோட்டை மாணவர்கள்..!

  இந்நிலையில், 2,390 பேரை சுதந்திரமாக நடமாடவிட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Cm edapadi palanisami, EPS, Tamilnadu government