Home /News /tamil-nadu /

Headlines Today : அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க இபிஎஸ் மறுப்பு - தலைப்புச் செய்திகள் (ஜூன் 22, 2022)

Headlines Today : அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க இபிஎஸ் மறுப்பு - தலைப்புச் செய்திகள் (ஜூன் 22, 2022)

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

Headlines Today : அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நாளை (23ம் தேதி) நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தை ஒத்திவைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

  அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி அதில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

  அதிமுக ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றபோது தடுத்து காப்பாற்றப்பட்டார்.

  அதிமுகவில் ஓபிஎஸ்-ஸுக்கு 7 மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு மட்டுமே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என ஓபிஎஸ் தரப்பில் காவல் துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா தொற்று அதிகரித்து 737 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டெல்லியில் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் இன்று சந்தித்து மனு அளிக்கின்றனர்.

  தமிழகத்தில் நெல் கொள்முதலை ஒரு மாதத்திற்கு முன்னதாவே தொடங்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல், மருத்துவர்களின் அறிவுரைப்படி அகற்றப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

  புதிய கல்விக் கொள்கையின்படி, பொது நுழைவுத் தேர்வை நடத்தினால், இடைநிற்றல்தான் அதிகரிக்கும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

  தேசிய கல்விக் கொள்கை இடை நிற்றலை அதிகரிக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

  சென்னையில் மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

  சென்னை திருவொற்றியூரில் ஒருநாள் பெய்த மழைக்கே குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

  கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோயில் திருத்தேர், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வீதி உலா செல்வதற்காக முழுவீச்சில் தயாராகி வருகிறது.

  14-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்களுக்கு காணொலி மூலம் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக முன்னாள் ஆளுநர் திரௌவ்பதி மர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்குகிறார்.

  மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமேலவை தேர்தலில் போட்டியிட்ட 5 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், சிவசேனா எம்எல்ஏக்கள் 22 பேர் குஜராத் மாநிலம் சூரத்தில் முகாமிட்டுள்ளனர்.

  மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி எம்எல்ஏ-க்கள் குஜராத்தில் முகாமிட்டதால் கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அமைச்சரவையை கூட்டி இன்று ஆலோசிக்கிறார்.

  நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணையை நிறைவுசெய்துள்ளனர்.

  அசாம் மாநிலத்தில் கனமழை, வெள்ளத்தால் பர்கர் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூன்று மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளன.

  அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மாலத்தீவில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது இஸ்லாமுக்கு எதிரானது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  கிரடிட் கார்டுகள் தொடர்பான பல்வேறு வழிமுறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசத்தை அக்டோபர் ஒன்றாம் தேதிவரை ரிசர்வ் வங்கி ஒத்திவைத்துள்ளது.

  நடிகர் விஜய் இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

  விஜய் நடித்துள்ள 66-வது திரைப்படத்திற்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளது.

  Must Read : விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் - ரஜினி ட்வீட்

  அமெரிக்காவில் 6 மாதம் முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

  ஊதிய உயர்வு கோரி இங்கிலாந்தில் 50,000-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  அர்ஜென்டினாவில் கட்டப்பட்டுள்ள எஸ்டாடிடோ மைதானம் உலகின் முதல் பசுமை மைதானம் என்ற பெருமையை பெற்றுள்ளது

  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
  Published by:Suresh V
  First published:

  Tags: ADMK, EPS, Headlines, OPS, Today news, Top News

  அடுத்த செய்தி