ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

TNAssembly: எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆப்சென்ட்.. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பவுன்சர்ஸுடன் வருகை!

TNAssembly: எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆப்சென்ட்.. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பவுன்சர்ஸுடன் வருகை!

அதிமுக

அதிமுக

சட்டப்பேரவை கூட்டத் தொடர் முதல் நாளான இன்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை மாற்றம் செய்யப்படுமா என்று எதிர்பார்த்த நிலையில் இருக்கை மாற்றம்செய்யப்படவில்லை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    சட்டபேரவை கூட்டத்தில் ஈபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. அதே நேரம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    கடந்த 2022-23ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி மே 10ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 2வது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.

    முன்னதாக எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயக்குமாரை அங்கீகரித்து அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியும் கடிதம் கொடுத்திருந்தார். அதேபோல  ஓபிஎஸ் தரப்பிலிருந்தும் கடிதம் கொடுக்கப்பட்டது. சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், எம்.எல்.ஏக்களின் இருக்கைகளில் மாற்றம் செய்யப்படவில்லை தகவல் வெளியானது.

    இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம் மனோஜ் பாண்டியன் ஆகியோர் தனியார் பாதுகாவலர்களுடன் வருகை தந்தனர்.

    இதையும் படிங்க : எதிர்க்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ்? - சட்டமன்றத்தில் புதிய பரபரப்பு!

    இந்நிலையில் சட்டசபை நிகழ்வுகள் தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட தலைமைச்செயலகம் வரவில்லை.

    இதையடுத்து தமிழக சட்டப்பேரவையின் மழைகால கூட்டத் தொடர் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் எலிசபெத் ராணி, உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், அஞ்சலை பொன்னுசாமி, சிபிஎம் மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல முன்னாள் உறுப்பினர் தர்மலிங்கம், கோவை தங்கம், ஹக்கீம், அமீது இப்ராகிம், வீரப்பன், ராஜா, பச்சையப்பன், புருஷோத்தமன், ஜனார்த்தனன், திருவேங்கடம் உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    Published by:Lakshmanan G
    First published:

    Tags: ADMK, DMK, EPS, OPS - EPS